பதைபதைக்க வைக்கும் காணொலி: ஓடும் ரயிலில் சிக்கிய பயணி - சவாய் மாதாபூர் ரயில் நிலையம்
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சவாய் மாதாபூர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் பயணி ஒருவர் ஏற முயற்சித்தார். அப்போது, படியிலிருந்து தவறி கீழே விழ நடைமேடை, ரயில் தண்டவாளத்திற்கு இடையே சிக்கிக் கொண்டார். துரிதமாகச் செயல்பட்ட ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் அவரை நடைமேடைக்கு இழுத்துச் சென்றார். இந்தப் பதைபதைக்கவைக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.