சிவப்பு பாண்டாவின் குட்டி குழந்தை! - ஆர்போரியல் இனம்
மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங்கில் உள்ள பத்மஜா நாயுடு இமயமலை விலங்கியல் பூங்காவில் கீழுள்ள டாப்கி தாரா பாதுகாப்பு இனப்பெருக்க மையத்தில் இன்று (ஜூன்.6) சிவப்பு பாண்டா ஒன்று குட்டியை ஈன்றது. தாயும், சேயும் நலமாக இருப்பதாகவும், அதனை சுழற்சி முறையில் கவனித்து வருவதாகவும், மருத்துவர்கள தெரிவித்தனர். ஆர்போரியல் இனமான இந்த சிவப்பு பாண்டா, அழிந்து வரும் விலங்குப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.