நர்ஸம்மா எனக்கு போடாதிங்க... கூரையின் உச்சியில் முதியவர் - ஹனுமந்தாப்பா
கர்நாடகா: தாவனகரே மாவட்டத்தின் ஹதாதி கிராமத்தில், தாவனகரே வட்டாசியர் தலைமையில் மருத்துவப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று கரோனா தொற்று தடுப்பூசி செலுத்தி வந்தனர். அப்போது, ஹனுமந்தாப்பா (77) என்ற முதியவர் தடுப்பூசி போடுவதற்கு பயந்து வீட்டின் கூரை மீது ஏறியுள்ளார். பின்னர், அனைவரும் ஒரு வழியாக அவரை சமாதானப்படுத்தி கீழே வரவைத்து, கடைசியில் அவருக்கு தடுப்பூசியும் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.