சிகிச்சையளிக்க இடமில்லை - கரோனா அறையாக மாறிய நடைபாதை! - ராஜஸ்தான் கொரோனா
ராஜஸ்தான் மாநிலத்தின் அரசு தலைமை மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இச்சூழலில் கரோனா இரண்டாவது அலையின் காரணமாக நாளுக்கு நாள் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதன் விளைவாக ராஜஸ்தான் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள நடைபாதையில் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான காணொலி தற்போது வேகமாகப் பரவி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.