'மெட்ரோ ரயிலில் ஊர் சுற்றிப்பார்த்த குரங்கு’ - வைரல் வீடியோ! - குரங்கு வைரல் வீடியோ
டெல்லி மெட்ரோ ரயிலில் குரங்கு ஒன்று பயணிக்கும் காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.ரயிலில் பயணிக்கும் குரங்கு, பயணியின் அருகில் அமர்ந்தவாறு, வேடிக்கை பார்த்துக்கொண்டே பயணம் செய்கிறது. வீடியோ பார்க்கும் பலரும் இந்தக் குரங்கு எங்கு செல்கிறது எனக் கேள்வி ஏழுப்புகின்றனர். மற்றொருபுறம் குரங்கு எப்படி மெட்ரோ ரயிலுக்குள் வந்தது என்பது குறித்து மெட்ரோ ரயில் ஊழியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.