வணிக வளாகத்தில் தீ விபத்து: பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் நாசம்! - கர்நாடக மாநிலம்
கர்நாடக மாநிலம் இல்கல் பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின.