கையில் வாங்கிய நகையுடன் ஓட்டம் எடுத்த திருடன்: துரத்திச் சென்று பிடித்த உரிமையாளர் - karnataka state news
பெங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றில் வாடிக்கையாளர்போல சென்ற நபர், தங்க நகையை கையில் வாங்கிப் பார்ப்பதுபோல கடை உரிமையாளரைத் திசைத்திருப்பி அங்கிருந்து தப்பியோடினார். சமயோஜிதமாகச் செயல்பட்ட நகைக்கடை உரிமையாளர் அருண் ஜி சேட், நகையுடன் ஓடிய நபரை துரத்திச் சென்று பிடித்து காவல் துறையில் ஒப்படைத்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பந்தர் காவல் நிலையை காவல் துறையினர் விசாரணை தொடர் நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.