இதயங்களை வென்ற ராணுவ வீரரின் மனிதாபிமானம்! - அலிபுர்துவார்
மேற்கு வங்க மாநிலத்தில் 4ஆம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 10) நடந்தது. இச்சூழலில், மலைக் கிராமமான அலிபுர்தூர் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் பாதுகாப்பிற்காக நின்றிருந்த ராணுவ வீரர் தேவேந்திர சிங், கைக்குழந்தையுடன் வாக்களிக்க வந்த பெண்ணிடம் குழந்தையைப் பெற்றுள்ளார். தொடர்ந்து குழந்தையின் தாய் வாக்களித்து விட்டு வரும்வரை கையில் வைத்து, அக்குழந்தையை இன்முகத்துடன் கவனித்துக்கொண்டார். பாதுகாப்புப்படை வீரரின் இந்தச் செயலை அங்கிருந்தவர்கள் அனைவரும் வெகுவாகப் பாராட்டிச் சென்றனர்.