Watch: மக்கள் வாழ்வில் வசந்தம் தரும் வசந்த பஞ்சமி பண்டிகை - கொல்கத்தா சிற்ப கலைஞர்கள்
வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக நாடு முழுவதும் வசந்த பஞ்சமி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா தொடங்கும் நாளை நாட்டின் சில பகுதிகள் சரஸ்வதி பூஜையாகக் கொண்டாடுகின்றனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சிற்ப கலைஞர்கள் தேவியர்களின் சிலைகளை உருவாக்கி விழாவை வரவேற்று கொண்டாடுகின்றனர்.