பட்டுப்பூச்சி வளர்ப்பால் தன்னிறைவு பெற்றுள்ள தெலங்கானா கிராமத்துப் பெண்கள் - தெலங்கானா கிராமத்துப் பெண்கள் பட்டுப்பூச்சி வளர்ச்சி
ஒருவர், இருவர் அல்ல... இந்தக் கிராமத்தில் உள்ள அனைத்துப் பெண்களும் பொருளாதார ரீதியாகத் தன்னிறைவு பெற்றவர்களாகத் திகழ்கின்றனர். மற்ற தொழில்களைப் போல் அல்லாமல் பட்டுப்பூச்சி வளர்ப்பு என்பது நல்ல லாபத்தைத் தருவதாகும். தெலங்கானா மாநிலம் சூரிய பேட் அருகே உள்ள நந்தியால குடம் கிராமத்துப் பெண்களின் முன்னேற்றம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.