மின்விசிறியில் கண்டம் : அச்சத்தில் கரோனா பாதிக்கப்பட்ட இளைஞர்! - கரோனா வார்டு
மத்தியப் பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில், கரோனா தொற்று பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞர் ஒருவர், தலைக்கு மேலுள்ள மின்விசிறி வித்தியாசமாக சுற்றுவதை வீடியோ எடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இளைஞர், எனக்கு கரோனாவை கண்டு பயமில்லை, இந்த மின்விசிறியை கண்டால்தான் பயமாகவுள்ளது என்று கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.