Watch: அசந்த நேரத்தில் செல்போனை லாவகமாக அபேஸ் செய்த திருடன் - சிசிடிவியில் அம்பலம் - கடையில் செல்போன் திருட்டு சிசிடிவி காட்சிகள்
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மஹித்பூர் என்ற பகுதியில் உள்ள கடையில் வாடிக்கையாளர் ஒருவரின் செல்போனை திருடன் ஒருவன் லாவகமாக திருடிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது. வாடிக்கையாளர் தனது சட்டை முன் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனை அவர் அசந்திருக்கும் நேரத்தில் திருடும் காட்சிகள் கடையின் சிசிடிவில் தெளிவாகப் பதிவாகியுள்ளன. இது தொடர்பாக வாடிக்கையாளர் இதுவரை புகார் அளிக்காததால் காவல்துறை விசாரணை தொடங்காமல் காத்திருக்கிறது.