60 அடி உயர தென்னை மரத்தில் சிக்கிய பூனை மீட்பு! - 60 அடி உயர தென்னை மரத்தில் சிக்கிய பூனை மீட்பு
கர்நாடகா மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் 60 அடி உயர தென்னை மரத்தில் ஏறிய பூனை, கீழே வர முடியாமல் தவித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் காயங்களுடன் தெருவில் கிடந்த இப்பூனையை கணேஷ் ராவ் என்பவர் மீட்டு வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், மீண்டும் அது ஆபத்தில் சிக்கவே, சமூக ஆர்வலர் ஒருவரைத் தொடர்பு கொண்டு, மரம் ஏறுபவர்களின் உதவியுடன் அதனை மீட்டுள்ளார்.