எல்லை பாதுகாப்பில் அசத்தும் பெண் ராணுவ வீரர்கள் - சர்வதேச பெண்கள் தினம்
"ஆண்களுக்கு மட்டுமே ராணுவத் துறை" என்று கூறும் ஆணாதிக்கவாதிகளுக்கு மத்தியில், தற்போது பெண்களும் அத்துறையில் கால் பதித்து சாதித்து வருகின்றனர். ராஜஸ்தான் ஸ்ரீகங்காநகர் பகுதியிலிருந்து 210 கிமீ தொலைவில் பெண் எல்லை பாதுகாப்பு படையினர், பாதுகாப்புக்காக நிலைநிறுத்தப்பட்டனர். எல்லையில் பாதுகாப்புக்காக நின்று தங்களுக்கு கொடுக்கப்பட்ட சவால்மிக்க பணிகளை இவர்கள் உற்சாகமாக செய்துவருகின்றனர்.