இடிந்து விழுந்த கட்டிடம்... நூலிழையில் உயிர் தப்பிய நபர் - maharasthra news
கோலாப்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் மகாத்வார் சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் மழைக்காக ஒருவர் ஒதுங்கியுள்ளார். அப்போது, கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுவதை பார்த்த மக்கள், அவரை உடனடியாக அங்கிருந்து ஓடும்படி அபாய சத்தம் எழுப்பினர். இதைக் கேட்டு ஒரு நொடி கூட தாமதிக்காமல், அங்கிருந்து சம்பந்தப்பட்ட நபர் ஓடியதால் உயிர் பிழைத்தார். இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.