Video: அஸ்ஸாமில் காட்டு யானை மிதித்து ஒருவர் உயிரிழப்பு - யானை தொடர்பான செய்தி
அஸ்ஸாம் மாநிலத்தின் கோலாகட் மாவட்டத்தில் காட்டு யானை ஒன்று, மனிதரைக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரச்சம்பவம், அந்த மாவட்டத்தில் உள்ள மொரொங்கி தேயிலை தோட்டத்தின் அருகே நடந்துள்ளது. மாலை நேரத்தில் பணியை முடித்து தொழிலாளிகள் திரும்பிக்கொண்டிருக்கையில், யானைகள் சாலையைக் கடந்து கொண்டு இருந்தன. அப்போது தொழிலாளி ஒருவர், துணி போன்ற ஒன்றை யானைக்கூட்டத்தின் இடையே காட்டினார். அதில் கோபமுற்ற காட்டு யானை ஒன்று, சாலையின் ஓரத்தில் தவறி விழுந்த ஒருவரை மிதித்தது. உடனே அந்த காயமுற்றவரை, அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றபோது, அவர் முன்னரே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். யானை - மனித மோதலின்போது எடுக்கப்பட்ட காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Last Updated : Jul 27, 2021, 4:36 PM IST