சோதனை சாவடியில் இளைஞருக்கு நேர்ந்த சோகம் - ஷாக்கிங் சிசிடிவி - வனத்துறை சோதனை சாவடி
தெலங்கானா மாநிலம், மஞ்சிரியாலாவிலுள்ள சோதனை சாவடியை, வனத்துறையினர் எதிர்ப்பை மீறி இரண்டு இளைஞர்கள் தங்களது இரு சக்கர வாகனத்தில் கடக்க முயன்றனர். அப்போது, கேட் அருகில் வரும் போது இருசக்கர வாகனத்தை ஓட்டியவர் முன்னெச்சரிக்கையாகத் தலையைக் குனிந்து தப்பித்து விட்டார். ஆனால், பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த நபர் தடுப்பில் பலமாக மோதி கீழே விழுந்தார். இதைப் பார்த்த சோதனை சாவடி காப்பாளர், தடுப்பைத் தூக்க முயன்றும் நொடியில் விபத்து அரங்கேறியது அதிர்ச்சிக்கு உள்ளாகியது.