புயலுக்குப் பின் அமைதியாக சாலையைக் கடந்து செல்லும் சிங்கங்கள் - மாநில செயலாளர் ராஜீவ் குமார் குப்தா
குஜராத்: டாக்டே புயலில் 'கிர்' சரணாலயத்தில் 18 சிங்கங்கள் காணவில்லை என்ற வதந்தி பரவியதைத் தொடர்ந்து கடற்கரையில் எந்த சிங்கமும் காணப்படவில்லை என்றும்; எந்த சிங்கமும் உயிரிழக்கவில்லை என்றும் வனத்துறை தெளிவுபடுத்தியது. இந்நிலையில் மாநிலச் செயலாளர் ராஜீவ் குமார் குப்தா குஜராத் கடற்கரையில் டாக்டே புயல் தாக்கிய பின்னர், சிங்கங்கள் சாலையைக் கடந்து செல்லும் வீடியோவினை வெளியிட்டு சிங்கங்கள் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளன என்றும் குஜராத் வனத்துறை கள ஊழியர்கள் சிங்கங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தனர்.