ஜார்க்கண்ட் மாநிலத்தின் அசத்தலான சைவ மட்டன்!
ஜார்க்கண்ட் மாநிலத்தின் உள்ளூர் மொழியில் சைவ உணவு காளான்கள் ருகடா, குக்தி என்று அழைக்கப்படுகின்றன. பொதுவாக, இவைகள் சால் மரத்தின் அடியில் காணப்படும். பருவ மழைக் காலங்களில் அதிகமாக கிடைக்கிறது. இங்குள்ள மக்கள் காடுகளில் இருந்து ருகடா, குக்தியை எடுத்து விற்பனை செய்ய சந்தைக்கு கொண்டு வருகிறார்கள். இதில் நிறைய புரதங்கள் அடங்கியுள்ளன. ருசியிலும் ஆட்டுக்கறி, கோழிக்கறி சுவை கிடைக்கிறது. இது இம்மக்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது.
Last Updated : Jul 8, 2021, 12:05 PM IST