வெள்ளப்பெருக்குக்கு காரணம் என்ன? உத்தரகாண்ட் முதலமைச்சர் விளக்கம் - உத்தரகாண்ட்
மலையின் உறைந்த பனியின் ஒரு பகுதி உடைந்ததன் விளைவாகவே உத்தரகாண்டில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும் பனிப்பாறை உடைந்ததால் ஏற்படவில்லை என்றும் அம்மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "வெள்ளத்தில் பாயும் நீரின் வேகத்தை அளவிடும்படி விஞ்ஞானிகளை கேட்டுக் கொண்டுள்ளேன். வரும் காலங்களில், இம்மாதிரியான சேதத்தை குறைக்க முன்னதாகவே அபாய எச்சரிக்கை விடும் வகையிலான தொழில்நுட்பத்தை உருவாக்குவது குறித்து விஞ்ஞானிகளுடன் ஆலோசித்து வருகிறேன்" என்றார்.