தடுப்பூசி போட கடும் பனியில் 6 கி.மீ. நடந்துசென்ற பெண்: குவியும் பாராட்டுகள்! - 6 கிலோ மீட்டர் நடந்து சென்ற பெண்
சிம்லா: மண்டி மாவட்டத்தில் உள்ள சுகாதாரப் பணிப்பெண் ஒருவர் மாணவர்களுக்குத் தடுப்பூசி போடுவதற்காக பள்ளிக்கு 6 கிலோமீட்டர் தூரம் பனியில் நடந்துசெல்லும் காணொலியை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் ஆகியோர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். சுகாதாரப் பணியாளர்கள் நம் நாட்டின் பெருமை. சுகாதாரப் பணியாளர்களை நினைத்து நான் பெருமைகொள்கிறேன் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.