சுக்கி ஆற்றில் வெள்ளப்பெருக்கு... அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்! - ஹரித்வாரில் வெள்ளப்பெருக்கு
மலை பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக, உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் சுக்கி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கில், இரண்டு வாகனங்கள் அடித்து செல்லும் காணொலி சமூக வலைதளத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.