குடியரசு தினக் கொண்டாட்டம்: காங்கிரஸ் நிர்வாகிகள் அடிதடி! - மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அடிதடி
போபால்: மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் பகுதியிலுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் 71ஆவது குடியரசு தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின்போது தேவேந்திர சிங் யாதவ், சந்து குஞ்சீர் ஆகிய இரு காங்கிரஸ் தலைவர்கள் அடிதடியில் ஈடுபட்டனர். அந்த வீடியோ, இணையத்தில் இப்போது வைரலாகப் பரவி வருகிறது.