வேகம் விவேகமல்ல... சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மணல் சிற்பங்கள்! - பாரடைஸ் கடற்கரை
புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கவும், பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பாரதியார் சிற்ப கலைக்கூடம் மாணவர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து போக்குவரத்து விதிமுறைகளை புரிந்துகொள்ளும் வகையில் மணல் சிற்பங்கள் அமைத்துள்ளனர். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, சாலை விதிகளை பயன்படுத்துவது, ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம், வேகக் கட்டுப்பாடு உள்ளிட்ட முக்கிய அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் மணல் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.