கின்னௌர் மக்களின் தானிய அரணான 'உர்ஸ்' கிடங்குகள் - Traditional Ration locker in Himachal's Kinnaur
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள கின்னௌர் பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்களுக்குத் தேவையான உணவுப் பண்டங்களை காலம்காலமாக வீட்டிற்கு வெளியே பதப்படுத்திவருகின்றார்கள் என்றால் நம்ப முடிகிறதா? இந்தக் கின்னௌர் மக்கள் தங்களின் உணவுப் பொருள்களை மரத்தால் ஆன 'உர்ஸ்'-இல் காலம் காலமாகச் சேமித்துவருகின்றனர். உள்ளூர்வாசிகளால் 'குத்தார்' என்றழைக்கப்படும், இந்தச் சேமிப்புக் கிடங்கு அவர்களின் தானியங்களின் அரண்.