சாலையில் ஹாயாக நடந்துசென்ற நான்கு புலிகள்!
பெங்களூரு கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில், நாகர்கோல் தேசியப் பூங்கா மற்றும் புலிகள் காப்பகம் அமைந்துள்ள பகுதி கர்நாடக - கேரள மாநிலங்களை இணைக்கும் எல்லையாக உள்ளது. நேற்று விஜயதசமி விடுமுறை என்பதால் இந்தப் பூங்காவிற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். அப்போது ஒரு சுற்றுலாப்பயணி தனது காரில் சென்றபோது புலி ஒன்று வனப்பகுதியிலிருந்து சாலையில் வந்தது. அவர் காரை நிறுத்திய பிறகு, மேலும் மூன்று புலிகள் அங்கு வந்தன. பின்னர் அந்த நான்கு புலிகளும் சாலையில் கேஷுவலாக நடந்து சென்றதை அவர் எடுத்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
TAGGED:
tigers spotted on road