பரசு ராமருடன் போர்; 11ஆம் நூற்றாண்டு விநாயகர் கோயில்! - தந்தேவாடா
சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் தோல்கால் மலைத் தொடர்கள் அமைந்துள்ளன. இவைகள் பார்க்க மேளம் போன்று காட்சியளிப்பதால், தோல்கால் என இம்மக்கள் அழைக்கின்றனர். இங்கிருக்கும் மலை ஒன்றின் மீது 2500 அடி உயரத்தில் மிக அரிதான விநாயகர் சிலை ஒன்று அமைந்துள்ளது. அவர் மேற்புற வலக்கையில் கோடரியையும், இடக்கையில் உடைந்த தந்தத்தையும் தாங்கியுள்ளார். அபய முத்திரையுடன் காணப்படும் கீழ்ப்புற வலக்கையில் அக்ஷய மாலையையும் இடக்கையில் கொழுக்கட்டையையும் வைத்துள்ளார். தோல்கால் மலையில் தோரணையாக அமர்ந்திருக்கும் இந்த விநாயகர் சிலை 1100 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.