ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்த்து வழங்கவேண்டும் - தொல்.திருமாவளவன் - தொல்.திருமாவளவன் நாடாளுமன்ற பேச்சு
சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன், ஒரு மாநிலத்தை மூன்று யூனியன் பிரதேசங்களாக கூறுபோட்டு சிதைத்தது அரசியல் சட்டத்திற்கு எதிரானது, அரசியல் நேர்மைக்கும் எதிரானது. மேலும், முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா ஏன் இன்னும் நாடாளுமன்றத்துக்கு வர இயலவில்லை என்ற கேள்வி எழுப்பிய அவர், ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களையும் மீண்டும் மாநிலமாக ஒருங்கிணைக்க வேண்டும், என கூறினார்.