ஆசிரியர்களுக்கு ஆசிரியராக இருக்கும் சிறுமி - நம்யா ஜோஷி
இன்றைய காலத்தில் பெண்களும், சிறார்களும் நினைத்துப் பார்க்க முடியாத சாதனைகளை செய்துக் காட்ட தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றுகிறது. இதற்கு ஓர் உதாரணம்தான் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள 14 வயது சிறுமி நம்யா ஜோஷி. 14 வயதேயான இந்தச் சிறுமி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியராக உள்ளார். ஆம், தங்கள் மாணவர்களுக்கு எளிமையாக புரியும் வகையில் விளையாட்டின் மூலம் எப்படி பாடம் நடத்துவது என இந்தச் சிறுமி பயிற்றுவிக்கிறார்.