நேற்று சாக்ஸ் விற்பனையாளர், இன்று பள்ளி மாணவர்: சிறுவன் வான்ஷின் கதை!
சுட்டெரிக்கும் வெயிலில், பஞ்சாப் சாலைகளில் சாக்ஸ் விற்றுக்கொண்டிருந்த 10 வயது பள்ளிச் சிறுவன் வான்ஷின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக, அதை அம்மாநில முதலமைச்சர், அம்ரீந்தர் சிங்-ம் பார்த்திருக்கிறார். சாக்ஸின் விலையை விட அதிக தொகை தரும் வாடிக்கையாளரிடம் , கள்ளமில்லாமல் தன் பொருளுக்குரிய தொகையை மட்டும் எடுத்துக் கொண்டு, மீதித் தொகையை திருப்பி தரும் வான்ஷின் நேர்மை முதலமைச்சரின் கவனத்தைக் கவர, அதற்கு பின்பு வான்ஷின் வாழ்க்கையில் நடக்கிறது மற்றம். நேற்று சாக்ஸ் விற்பனையாளராக இருந்த வான்ஷ், இன்று பள்ளி மாணவராகி இருக்கிறார்.