பல்லடம், கரூர், குமாரபாளையம் பகுதிகளில் டெக்ஸ்டைல்ஸ் பூங்கா - மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் உறுதி - பல்லடத்தில் டெக்ஸ்டைல்ஸ் பூங்கா
டெல்லி: மக்களைவில் திமுக எம்பி தனுஷ் எம். குமார், தமிழ்நாட்டில் பெரும்பாலான டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. எனவே, ஏற்றுமதி நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதற்கு மத்திய அமைச்சர் பியூஷ்கோயல், தமிழ்நாடு டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் மாநிலம். இதன்காரணமாக ஏற்கெனவே பல்லடம், கரூர், குமாரபாளையம் பகுதிகளில் மிகப்பெரிய அளவிலான டெக்ஸ்டைல்ஸ் பூங்கா அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
Last Updated : Feb 9, 2022, 9:04 PM IST