காலால் மிதித்து ஆசி! - ஏமாறும் பக்தர்களும்... ஏமாற்றும் போலி சாமியார்களும்... - பக்தர்களை தனது காலால் மிதித்து ஆசி வழங்கிய சாமியார்
ஒடிசா மாநிலம் கோர்டா பகுதியில் பான்புர் எனுமிடத்தில் விஜயதசமி அன்று தொழிலாளர்கள் சிலர் தங்கள் இருசக்கர வாகனங்களுக்கு ஆயுத பூஜை செய்தனர். அப்போது அந்த இடத்திற்கு வந்த ராமச்சந்திர சமந்தராய் என்ற சாமியார் பக்தர்களின் தலையில் கால் வைத்து மிதித்து ஆசி வழங்கினார். இந்த சாமியார் ஆசி வழங்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி விமர்சனத்துக்கு உள்ளாகிவருகிறது.