குஜராத்தை சூரையாடி ஓய்ந்த ’டவ் தே’ புயல்! - குஜராத்
குஜராத்: தென் கிழக்கு அரபிக் கடலில் உருவான டவ் தே புயல் நள்ளிரவில் குஜராத் அருகே கரையைக் கடந்தது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், குஜராத் மாநிலம் சௌராஷ்டிரா அருகே டவ் தே புயல் முற்றிலுமாக கரையைக் கடந்தது. அதி தீவிர டவ் தே புயல், தற்போது தீவிர புயலாக வலுவிழந்து டையூவுக்கு 30 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.