தெலங்கானா ஆளுநர் ஆனார் தமிழிசை! - தெலங்கானா ஆளுநர்
பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை தெலங்கானா ஆளுநராக இன்று காலை பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராகவேந்திரா சிங் சவுகான் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ், தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.