வீட்டிற்குள் 400 போன்சாய் மரங்கள் வளர்த்து அசத்தும் சுலைமான் - குப்பம் தாலிபரம்பா சுலைமான்
கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் குப்பம் தாலிபரம்பாவில் அமைந்துள்ள இந்த வீடுதான் சின்ன, சின்ன மரங்களின் சொர்க்கம். 400க்கும் மேற்பட்ட போன்சாய் வகை மரங்களுக்கு அடைக்கலம் தருகிறது சுலைமானின் வீடு. வீட்டின் எல்லா பக்கங்களிலும் சின்ன சின்ன தொட்டிகளில் தாவரங்கள் நடப்பட்டுள்ளன. மொட்டை மாடி, முன்புறம் மட்டுமல்லாமல் சுலைமானின் இதயத்திலும் அவர் தாவரங்களுக்கு இடம் கொடுத்துள்ளார்.