உயிரிழந்த யானையை காண படையெடுத்த யானைக்கூட்டம்! - யானை
அமராவதி: ஆந்திர மாநிலம், சித்தூர் அருகேயுள்ள கோட்டிகுட்டா கிராமத்தில், கடந்த 10ஆம் தேதி மின்சாரம் பாய்ந்து ஐந்து வயது பெண் யானை உயிரிழந்தது. தொடர்ந்து, தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர், ஜூன் 11ஆம் தேதியன்று அந்த யானையை அடக்கம் செய்தனர். இந்நிலையில், நேற்று (ஜூன்.12) உயிரிழந்த யானையைக் காண, சம்பவ இடத்தில் யானைக்கூட்டம் முகாமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.