Sri Lanka PM Rajapaksa: திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு வந்த ராஜபக்சே, அவரது குடும்பத்தினருக்கு வரவேற்பு - திருப்பதிலில் இலங்கை பிரதமர் ராஜபக்சே சாமி தரிசனம்
🎬 Watch Now: Feature Video
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனத்திற்காக இலங்கை பிரதமர் ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் கொழும்பில் இருந்து சிறப்பு விமானம் மூலம் திருப்பதி விமான நிலையம் வந்தடைந்தனர். ராஜபக்சே குடும்பத்தினருக்கு ஆந்திர மாநில துணை முதலமைச்சர் நாராயண சுவாமி, மாவட்ட ஆட்சியர் ஹரிநாராயணன் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தியப் பாரம்பரிய நடனங்களுடன் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் இலங்கை பிரதமர் சாலை வழியாக திருமலை சென்றார். திருப்பதியில் பத்மாவதி நகரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் இரவு தங்கும் இலங்கை பிரதமர் ராஜபக்சே, நாளை காலை அவர் மனைவியுடன் சுவாமி தரிசனத்தில் கலந்து கொள்கிறார்.