வீட்டிற்குள் புகுந்த நாகப் பாம்பு! - உத்தரகாண்ட்
உத்தரகாண்ட்: பிருமதாரா பகுதியில் உள்ள சாந்தி குஞ்ச் தெருவில் உள்ள ஒருவரது வீட்டில் கொடிய விஷத்தன்மை கொண்ட நாகப் பாம்பு ஊர்ந்து சென்றுள்ளது. இதை கண்ட மக்கள் வனவிலங்கு நலச்சங்கத்தினருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த வனவிலங்கு நலச்சங்கத்தினர் நாகப் பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். மீட்டக்கப்பட்ட பாம்பு, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.