கொல்கத்தாவில் பண மழை - சாலையில் ஓடி ஓடி சேகரித்த மக்கள்! - சாலையில் ஒடி ஒடி பணத்தை சேகரித்த மக்கள்
கொல்கத்தா: வருமான வரித்துறையினர் பேன்டின்க் சாலையில் உள்ள பிரபல நிறுவனத்தில் சோதனை செய்யும் போது, திடீரென்று நிறுவனத்திலிருந்து பணம் வெளியே எறியப்பட்டது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், சாலையில் ஓடி ஓடி பணத்தை எடுத்துச் சேகரித்தனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறை, மக்களிடமிருந்து ரூ. 3 லட்சத்து 75 ஆயிரத்தை மீட்டனர்.