தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

மக்களை கவர்ந்த கடல் உணவுத் திருவிழா! - கடல் உணவு திருவிழா

By

Published : Sep 26, 2019, 2:20 PM IST

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ட்ரெண்ட் செட் வணிக வளாகத்தில் பார்பிக்யூ சார்பில் கடல் உணவுத் திருவிழா நடைபெற்றது. விஜயவாடாவில் உள்ள மக்களுக்கு கோழி, ஆட்டிறைச்சி, கடல் மீன், இறால்கள், நண்டுகள், சுறாக்கள், ஆக்டோபஸ் எனப் பலவித சுவையான உணவுகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்தக் கடல் உணவுத் திருவிழா நடத்தப்பட்டது. இந்த உணவுத் திருவிழா முதன்முறையாக ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றதையடுத்து, இப்போது ஆந்திர மாநிலத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் இந்த உணவுத் திருவிழா நடத்தப்படவுள்ளது. தசரா முடியும்வரை இந்த உணவுத் திருவிழா நடைபெறும் என பார்பிக்யூ மேலாளர் நீஹான் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details