Watch Video: சுப்ரியா சூலேவுடன் ஜாலியாக நடனமிட்ட சஞ்சய் ராவத் - சஞ்சய் ராவத் மகள் திருமண விழா
சிவ சேனா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் ராவத், கூட்டணிக் கட்சி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினரான சுப்ரியா சூலேவுடன் இணைந்து நடனமாடிய காணொலி வைரலாகிவருகிறது. சஞ்சய் ராவத்தின் மகள் பூர்வஷியின் திருமண விழாவில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிராவில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது.