சபரிமலை நடை திறப்பு - மண்டல மாவிளக்கு
சபரிமலை திருக்கோயில் மண்டல மாவிளக்கு பூஜையை முன்னிட்டு திங்கள்கிழமை (நவ.15) மாலை திறக்கப்பட்டது. நவ.16 முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். எனினும், தொடர் கனமழை வெள்ளப் பெருக்கு காரணமாக பம்பையில் பக்தர்கள் நீராட அனுமதியில்லை. உடனடி பதிவு முறையும் நிறுத்தப்பட்டுள்ளது. மண்டல மாவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் திருக்கோயில் 41 நாள்கள் திறந்து இருக்கும். அதன்பின்னர் கோயில் நடை டிசம்பர் 26ஆம் தேதி சாத்தப்படும்.