ஓடும் ரயிலுக்கு அடியில் மாட்டிக்கொண்ட பயணி: பதைபதைக்க வைக்கும் காணொலி! - ஓடும் ரயிலுக்கு அடியில் மாட்டிகொண்ட பயணி
கல்யாண் ரயில் நிலையத்தில் LTT பாட்னா விரைவு ரயில் நேற்று (பிப்ரவரி 7) மாலை 4 மணியளவில் நடைமேடை எண் 4-க்கு வந்தது. அப்போது, பயணி ஒருவர் ரயில் கிளம்பும்போது ஏற முயன்றுள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்தப் பயணி கீழே விழுந்து ரயில்வே நடைமேடையின் இடைவெளியில் சிக்கிக் கொண்டார். இதைப் பார்த்த ஆர்பிஎஃப் வீரர்கள் தக்க சமயத்தில் அந்தப் பயணியை வெளியே இழுத்து காப்பாற்றினர். இந்தக் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் தற்போது வெளியாகியுள்ளது.