கண்களை மூடிக்கொண்டு பியானோ வாசித்து அசத்திய சிறுவன்! - பல கின்னஸ் உலக சாதனைகளை படைக்கும் சிறுவன்
பெங்களூரு: ஹிரியூரைச் சேர்ந்த அர்ஷீத்(13) என்ற சிறுவன், கண்களை மூடிக்கொண்டு பியானோ வாசித்து சாதனை படைத்துள்ளார். இவர் பல கன்னட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். வெவ்வேறு இசை வடிவங்களில் 44 நிமிடங்கள் தொடர்ந்து பியானோ வாசித்ததற்காக இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அவரை அங்கீகரித்துள்ளது. இதுமட்டுமின்றி, பல கின்னஸ் உலக சாதனைகளையும் படைத்துள்ளார்.