மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற கோகாய்; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு - உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகாய்
டெல்லி: மாநிலங்களவை உறுப்பினராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்று பதவியேற்றுக்கொண்டார். மாநிலங்களவை தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்யா நாயுடு அவருக்கு பதவிப் பிரமானம் செய்துவைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.