'இந்தியா 75' - புதிய வடிவில் வெளியான 'மிலே சுர் மேரா துமாரா' பாடல் - நாட்டின் 75ஆவது சுதந்திர தினம்
நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக ரயில்வே அமைச்சகம், 1988ஆம் ஆண்டு முதன்முதலாக தூர்தர்ஷனில் ஒளிபரப்பான 'மிலே சுர் மேரா துமாரா' என்ற தேச ஒற்றுமை பாடலின் புது வடிவத்தை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வடிவத்தில் ரயில்வே ஊழியர்கள், டோக்கியோ ஒலிம்பிக் வீரர்கள் ஆகியோர் பாடியுள்ளனர்.