வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: டிராக்டர் பேரணி சென்ற ராகுல் காந்தி...! - Rahul gandhi tractor rally
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பஞ்சாப் மாநிலத்தில் 50 கி.மீ. தூரத்திற்கு டிராக்டர் பேரணி சென்றார். அப்போது அவருடன் பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் இருந்தார். இந்த பேரணியின் போது வழி நெடுகிலும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள், விவசாயிகள் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.