கிரிக்கெட் விளையாடிய ராகுல்: இளைஞர்கள் உற்சாகம்! - ராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடிய வீடியோ
ஹரியானா மாநிலத்தில் தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி சென்று கொண்டிருந்தார். மோசமான வானிலை காரணமாக தனியார் கல்லூரி மைதானத்தில் அவரது ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. பின்னர், அங்கிருந்த இளைஞர்களுடன் உற்சாகமாக ராகுல் கிரிக்கெட் விளையாடினார். அது தொடர்பான காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.