Watch video: 'தமிழ்நாட்டை ஒருபோதும் பாஜகவால் ஆள முடியாது!' - மக்களவையில் ராகுல் காந்தி உரை
நேற்று மக்களவையில் வயநாடு எம்பி ராகுல் காந்தி தமிழ்நாடு குறித்து பேசிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது. இந்தியா என்பது பல்வேறு மாநிலங்களின் ஒன்றியம்தான் என்று கூறிய ராகுல் காந்தி, ’தமிழ்நாட்டில் பாஜகவால் வாழ்நாள் முழுவதும் ஒருபோதும் ஆள முடியாது' என ஆவேசமாகப் பேசினார். 1967-க்குப் பிறகு தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்பது காங்கிரசின் நீண்ட கால கனவாகவே இருந்துவருவது கவனிக்கத்தக்கதாகும்.