தர்ணாவில் ஈடுபட்ட பிரதமர் மோடியின் சகோதரர்! - பிரதமர் மோடி சகோதரர் தர்ணா
பிரதமர் மோடியின் இளைய சகோதரரும், அனைத்து இந்திய நியாய விலைக்கடை ஒப்பந்ததாரர் கூட்டமைப்பின் (AIFPSDF) துணை தலைவருமான பிரகலாத் தாமோதர் மோடி, லக்னோவில் உள்ள சௌத்ரி ஷரன் சிங் சர்வதேச விமான நிலையத்தில் இன்று தர்ணாவில் ஈடுபட்டார். இந்தத் தர்ணாவில் லக்னோ காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பிய அவர், கைது செய்யப்பட்ட தனது ஆதரவாளர்களை விடுவிக்காவிட்டால் கால வரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தார்.